அதிகரித்து வரும் பன்றிக் காய்ச்சலால் அதிக மரணங்கள் ஏற்படுவதை அடுத்து பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி மருந்துகளை உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது.
. இந்நிலையிலேயே பன்றிக்காய்ச்சல் நோய்த் தடுப்பூசி மருந்துகளை தந்துதவுமாறு சுகாதார அமைச்சு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் பேச்சுகளை நடத்தி வருகின்றது. ஆயினும், இத்தடுப்பூசி மருந்துகள் பன்றிக்காய்ச்சல் நோயால் மிகவும் கடுமையாகப் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும், குறிப்பாகக் கர்ப்பிணித்தாய்மார்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோயாளர்களுக்கு இம்மருந்துகளை விநியோகிக்க முடியாது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. இத்தடுப்பூசி மருந்துப் பொருளால்ஏற்படக்கூடிய பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சு விளக்கமளித்துள்ளது.
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment