Friday, November 27, 2009

கலாநிதி மாறனுக்கு சிறந்த தொழிலதிபர் விருது



"சன் நெட்வொர்க்"தலைவரும் நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தொழிலதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பு "தி இண்டஸ் என்டர்பிரனர்ஸ்" (டை).
இந்த அமைப்பின் சார்பில், சிறந்த தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்தார். விழாவில், 2009-ம் ஆண்டுக்கான சிறந்த தொழிலதிபருக்கான விருது "சன் நெட்வொர்க்" தலைவரும், நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டது.

விழாவில், தொடக்க நிலை தொழிலதிபருக்கான விருது ‘ஈக்வடார்ஸ் மைக்ரோ பைனான்ஸ்’ வாசுதேவனுக்கும், பெண் தொழிலதிபருக்கான விருது "ஆபீஸ் டைகர்" காமினி நாராயணனுக்கும், சமூக தொழிலதிபருக்கான விருது ‘எக்ஸ்னோரா’ நிர்மலுக்கும், அடுத்த தலைமுறை தொழிலதிபருக்கான விருது ‘அப்பாசாமி பில்டர்ஸ்’ ரவி அப்பாசாமிக்கும், உயர்சிறப்பு தொழிலதிபருக்கான விருது ‘யுனிவர்செல்’ சதீஷ்பாபுவுக்கும், பெருமைமிகு குடும்ப தொழிலுக்கான விருது ‘முருகப்பா குழுமம்’ எம்.வி.சுப்பையாவுக்கும், வாழ்நாள் சாதனை தொழிலதிபருக்கான விருது ‘இந்தியா சிமென்ட்ஸ்’ தலைவர் சீனிவாசனுக்கும் வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment