Friday, November 20, 2009

பாகிஸ்தானில் கோர்ட்டில் மனித குண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தற்கொலைப்படை மூலம் இந்த தாக்குதலை நடத்து கின்றனர்.இன்று பெஷாவர் நகரில் உள்ள கோர்ட்டில் தற்கொலை தாக்குதல் நடந்தது.குண்டுவெடிப்பில் சிக்சி 16 பேர் பலியானார்கள். 26 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.குண்டுவெடிப்பை அடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்தன.

0 comments:

Post a Comment