Friday, November 27, 2009

மீண்டும் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல்



கர்நாடகாவில் 4 மாதங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் பரவியது. இந்த நோயால் இதுவரை 125 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்களுக்கு பன்றி காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 மாதமாக இந்த நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. இப்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பெங்களூரில் மீண்டும் பன்றி காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. ஆக்ஸ்போர்டு நர்சிங் கல்லூரி மாணவருக்கு இந்த நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த கல்லூரியை சேர்ந்த 35 மாணவர்கள் உட்பட 46 பேருக்கு ராஜிவ் காந்தி நெஞ்சக மருத்துவ மையத்தில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 4 மாணவர்கள் உட்பட 7 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், கடந்த புதன்கிழமை 9 பேருக்கு பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கர்நாடகாவில் இந்த நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது.

கலாநிதி மாறனுக்கு சிறந்த தொழிலதிபர் விருது



"சன் நெட்வொர்க்"தலைவரும் நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தொழிலதிபர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 17 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பு "தி இண்டஸ் என்டர்பிரனர்ஸ்" (டை).
இந்த அமைப்பின் சார்பில், சிறந்த தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்தது. இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் சீனிவாசன் துவக்கி வைத்தார். விழாவில், 2009-ம் ஆண்டுக்கான சிறந்த தொழிலதிபருக்கான விருது "சன் நெட்வொர்க்" தலைவரும், நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட்டது.

விழாவில், தொடக்க நிலை தொழிலதிபருக்கான விருது ‘ஈக்வடார்ஸ் மைக்ரோ பைனான்ஸ்’ வாசுதேவனுக்கும், பெண் தொழிலதிபருக்கான விருது "ஆபீஸ் டைகர்" காமினி நாராயணனுக்கும், சமூக தொழிலதிபருக்கான விருது ‘எக்ஸ்னோரா’ நிர்மலுக்கும், அடுத்த தலைமுறை தொழிலதிபருக்கான விருது ‘அப்பாசாமி பில்டர்ஸ்’ ரவி அப்பாசாமிக்கும், உயர்சிறப்பு தொழிலதிபருக்கான விருது ‘யுனிவர்செல்’ சதீஷ்பாபுவுக்கும், பெருமைமிகு குடும்ப தொழிலுக்கான விருது ‘முருகப்பா குழுமம்’ எம்.வி.சுப்பையாவுக்கும், வாழ்நாள் சாதனை தொழிலதிபருக்கான விருது ‘இந்தியா சிமென்ட்ஸ்’ தலைவர் சீனிவாசனுக்கும் வழங்கப்பட்டது.

இந்தியா பாதுகாப்பாக உள்ளது - சிதம்பரம்




"பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள ஓர் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட தற்போது இந்தியா மிகச் சிறப்பான தயார் நிலையில் உள்ளது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி ஹெட்லி முன்னர் அடிக்கடி இந்தியா வந்து சென்றுள்ளான். அதுபோல இப்போது வந்தால், அவன் பாதுகாப்பு வலையில் சிக்கிக் கொள்வான். மும்பை தாக்குதல் நடந்த பின், அவன் ஒருமுறை தான் இந்தியா வந்துள்ளான். அதற்கு முன்னர் எட்டு முறை வந்துள்ளான்.ஹெட்லியை இந்தியாவில் கைது செய்ய புலனாய்வுத் துறையினர் தவறி விட்டனர் எனக் கூறப்படுவது சரியல்ல. அவன் விவகாரம் முற்றிலும் மாறுபட்டது. அவன் இங்கு வந்திருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொள்ளவில்லை.
ஒவ்வொரு நாளும் பாதுகாப்பை, அதற்கான திறனை நாம் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். உளவு நிறுவனங்கள் தகவல் சேகரிப்பதும், அவற்றை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதும் தற்போது மேம்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினர் பலப்படுத்தப்பட்டுள்ளனர். நான்கு நகரங்களில் அவற்றின் துணைப் பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

Monday, November 23, 2009

சீன மொபைல்களுக்கு ஆப்பு ??!!



ஐ.எம்.இ.ஐ., என்றழைக்கப்படும் அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கான சேவை, டிசம்பர் 1ம் தேதி நிறுத்தப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கில் மொபைல் போன்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளது .மொபைல் போன் தயாரிப்பில், இந்தியாவில் பல்வேறுநிறுவனங்கள் போட்டி போட்டு வந்தாலும், சீன தயாரிப்புகள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்திவருகின்றன.

மொபைல் போன்களை பொறுத்தவரை, சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ., - இன்டர்நேஷனல் மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) முக்கியமாக உள்ளது. மொபைல் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் இந்த "15' இலக்க எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.இந்த ஐ.எம்.இ.ஐ., எண் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட அந்த போன் எங்கிருக்கிறது, போன் யாருடையது என்பதை கண்டறிய முடியும். போன் தொலைந்து போனாலும், இந்த எண் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.


இந்நிலையில், 2007ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய சீன மற்றும் கொரிய நாட்டு தயாரிப்புகளில் இந்த எண்கள் இல்லாமல் வந்தன. மற்ற மொபைல்போன்களின் விலையை விடமிகவும் குறைவாக இருந்ததால், பலரும் இந்த மொபைல் போன்களை விரும்பி வாங்கினர்.பயங்கரவாதச் செயல்களில்ஈடுபடுவோரும், இந்த மொபைல் போன்களை பயன்படுத்தத் துவங்கினர். இதனால், பல பிரச்னைகள் தலை தூக்கின. பல குற்றச் சம்பவங்களில், இம்மாதிரியான மொபைல் போன்களை குற்றவாளிகள் பயன்படுத்தியதால், போலீசின் பிடியில் இருந்து தப்பும் சூழல் ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத் துறை, ஐ.எம்.இ.ஐ., எண்கள் இல்லாத மொபைல் போன்களை பயன்படுத்த தடை கொண்டு வந்தது. இந்த வகையான மொபைல் போன்கள், நாடு முழுவதும் 8சதவீதம் அளவிற்கு புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுஉள்ளது.தொலைத்தொடர்புத் துறையின் அறிவிப்பால், ஐ.எம்.இ.ஐ., எண்கள் இல்லாத மொபைல் போன்களை வாங்கியவர்கள் கலக்கம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஐ.எம்.இ.ஐ., எண்களை போன்களில் பதிவு செய்யும் மையங்கள் துவக்கப் பட்டு, ஆங்காங்கே வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இந்திய செல்லுலார் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தினர் (ஐ.சி.ஏ.,) கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐ.எம்.இ.ஐ., எண் இல்லாத மொபைல் போன்களை தடை செய்வதற்கான கெடு, மார்ச் 31ல் இருந்து டிச., 1க்கு தொலைத்தொடர்புத் துறை மாற்றி அமைத்துள்ளது.ஐ.எம்.இ.ஐ., எண்கள் இல்லாத மொபைல் போன்கள், மூன்றுபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், மற்ற போன்களின் ஐ.எம்.இ.ஐ., எண்ணை திருடி பயன்படுத்தும் போன்களும் அடக்கம்.


இந்த மூன்றுபிரிவுகளிலும் உள்ள மொபைல் போன்களுக்கான சேவை, வரும் டிச., 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இணைப்பு துண்டிக்கப் படும்.இது குறித்து தொலைத்தொடர்புத் துறை அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்லி., கூட்டமும் இன்று முதல் நடைபெறுவதால், இப்பிரச்னை எழும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.ஆனால், இம்மாதிரி மொபைல் பயன்பாட்டிற்கு சரிப்படாதுஎன்று அரசு முடிவு செய்யும் பட்சத்தில், இம்மாதிரி மொபைல் போனை பயன்படுத்துவோர், இதை ஒதுக்கிவிட்டு, அங்கீகாரம் பெற்ற மொபைலை வாங்க வேண்டியதைத் தவிர வேறு வழி இருக்காது.
: சீன மற்றும் கொரியதயாரிப்பு மொபைல் போன்கள் வாங்கி பயன்படுத்துபவர்கள், சென்னையில் உள்ள ரிச்சி தெரு மற்றும் பர்மா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது மொபைல்களுக்கு, "ஐ.எம்.இ.ஐ.,' பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு பதிவு செய்யப்படும் ஐ.எம்.இ.ஐ., எண்களை, மொபைல் போன் சேவை அளிக்கும்நிறுவனங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த எண்ணை பெற்றாலும், அது மொபைல் போனை பாதுகாக்க பயன் படாது.

கண்ணீரும் மருந்து தான் !!!



பொதுவாக உட‌லி‌ல் காய‌ம் ப‌ட்ட‌க் குழ‌ந்தைக‌ள் அழுவதா‌ல், அவ‌ர்களது கா‌ய‌ம் ‌விரை‌வி‌ல் ஆறு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ல் ந‌ம்‌பு‌வீ‌‌ர்களா?
ஆ‌ம், ‌நி‌ச்சயமாக, அழாத குழ‌ந்தைகளை ‌விட, அழு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் காய‌ம் ‌விரை‌வி‌ல் ஆறுவது அ‌றி‌விய‌ல் உ‌ண்மைதா‌ன். இத‌ற்கு‌க் காரணமாக அமைவது க‌ண்‌ணீ‌ரி‌ல் உ‌ள்ள ‌கிரு‌மி நா‌சி‌‌னி.
ம‌‌னித‌‌ர்க‌ளி‌ன் க‌ண்‌‌ணீ‌ரி‌ல் ஒரே ஒரு து‌ளியை எடு‌த்து 6 ஆ‌யிர‌ம் து‌ளி த‌ண்‌ணீருட‌ன் கல‌ந்தா‌ல் கூட அ‌ந்த கல‌ப்பு ‌‌நீ‌ர் நூ‌ற்று‌க்கண‌க்கான நோ‌ய்‌க்‌கிரு‌மிகளை‌க் கொ‌‌ல்லு‌ம் ச‌க்‌தி கொ‌ண்ட ‌கிரு‌மி நா‌சி‌னியாகவே இரு‌க்கு‌ம்.லைனோச‌ம் எ‌ன்ற ஒரு வகை ரசாயன‌ம் ம‌னித‌‌ர்க‌ளி‌ன் க‌ண்‌ணீ‌ரி‌ல் ஏராளமா‌ய் இரு‌க்‌கிறது. இதுவே ‌கிரு‌மி நா‌சி‌‌னியாக செய‌ல்‌படு‌கிறது.
இனி குழந்தைகள் அழுதால் நல்லது தான்....

Sunday, November 22, 2009

அக்னி – 2 ஏவுகணை விண்ணில் சீறிப்பாயவிருக்கிறது...

அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி – 2 ஏவுகணையை இந்தியா நாளை ( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை செய்கிறது . இன்றைய சூழ்நிலையில் பாதுகாப்பு அவசியமாகும். இதற்கென உலக அளவில் வல்லரசு நாடுகள் ஆயிரம் கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது.சில தினங்களுக்கு முன் சீனா 60 ம் ஆண்டு விழா கொண்டாடிய நேரத்தில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஆயுதங்கள் குவிப்பை உலகிற்கு காட்டி பெருமை கொண்டது.இந்நிலையில் இந்தியாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி தங்களது படைக்கு பலம் சேர்த்து வருகின்றனர். மத்திய ரக அக்னி -2 ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும். இது 17 டன் எடை கொண்டதாகும். 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும். நாளை ஒரிசா மாநிலம் பாலசோர் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி (டி.ஆர்.டி.ஓ.,) துறையினரும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளனர். முதன் முறையாக இந்த முறை இரவில் சோதனை நடத்தப்படுகிறது .

மிகப்பெரிய தங்க சுரங்கம்

மெக்சிகோவில் மிகப்பெரிய தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40 லட்சம் அவுன்ஸ் தங்கம் கிடைக்கும் . மெக்சிகோவின் சிஹுவாஹுவா மாநிலம் அகம்போ நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பைனோஸ் அல்டோஸ் பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது. இதிலிருந்து தாதுப் பொருட்கள் வெட்டி எடுக்கும் பணியை கனடாவின் அக்னிகோ&ஈகிள் மைன்ஸ் நிறுவனம் ரூ.1,128 கோடி முதலீட்டில் துவங்கி உள்ளது.பைனோஸ் அல்டோஸ் சுரங்க திட்டம் நாட்டின் மிக முக்கியமான திட்டம் ஆகும். இதில் நாள் ஒன்றுக்கு 4000 டன்கள் வீதம் மொத்தம் 4.18 கோடி டன் தாதுப் பொருட்கள் கிடைக்கும்